Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உங்கள் நகங்களை உற்று நோக்குங்கள்!

உங்கள் நகங்கள் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கின்றன என்று தெரியுமா? இதோ மருத்துவர்கள் கூறும் சில குறிப்புகள்:

வாசிப்புநேரம் -

உங்கள் நகங்கள் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கின்றன என்று தெரியுமா? இதோ மருத்துவர்கள் கூறும் சில குறிப்புகள்:

வெளுப்பான நகங்கள்: ரத்த சோகை, இருதயப் பிரச்கினை, கல்லீரல் நோய், சத்துக்குறைபாடு ஆகியவற்றின் அறிகுறியாக அது இருக்கலாம்.

வெள்ளை நகங்கள்: கறுப்பு ஓரத்துடன் கூடிய வெள்ளை நகங்கள் கல்லீரல் பிரச்சினையைக் குறிக்கலாம்.

மஞ்சள் நகங்கள்: பெரும்பாலும் பூஞ்சைத் தொற்றை இது குறிக்கும். அது மோசமானால் நகம் பெயர்ந்துவிடும் அல்லது நொறுங்கிவிடும். சில சமயங்களில், அத்தகைய நகங்கள், தைராய்டு பிரச்சினை, நுரையீரல் பிரச்கினை ஆகியவற்றைக் குறிக்கலாம். 

நீலம் பாய்ந்த நகங்கள்: உடலுக்குத் தேவையான பிராணவாயு கிடைக்கவில்லை என்பதை அது குறிக்கிறது. நாள்பட்ட அத்தகைய நகங்கள், நுரையீரல், இருதயப் பிரச்சினைகளைக் குறிக்கலாம். 

சிதைந்த நகங்கள்: சிதைந்த நகங்கள் ஸோரியாசிஸ் எனும் தோல் நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

பிளவுபட்ட நகங்கள்: காய்ந்த பிளவுபட்ட நகங்கள் தைராய்டு நோயின் அறிகுறிகள். 

நகத்தை ஒட்டிய சதைப் பகுதியில் வீக்கம்: நகத்தை ஒட்டிய பகுதியில் வீக்கம் தென்பட்டால் அது அழற்சியைக் குறிக்கும்.

நகங்களுக்கு ஊடே கறுப்பு: நகங்களுக்கு இடையே கறுப்பு நிறம் தென்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அது தோல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.

கடிக்கப்பட்ட நகங்கள்: நகம் கடித்தல் ஒரு பழக்கமாக இருக்கலாம். ஆனால் அது சில சமயங்களில், பதற்றப்படும் மனத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

நகங்களில் தென்படும் மாற்றம், பெரும்பாலும் ஆரம்ப கட்ட அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. பல நகப் பிரச்சினைகள் அபாயமற்றவை. உங்களுக்குச் சந்தேகம் எழுந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்