Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடற்பருமனுக்கு எதிரான மனப்போக்கு

 உடற்பருமனாக இருப்போருக்கு எதிரான எண்ணத்தை நம்மில் சிலர் கொண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
உடற்பருமனுக்கு எதிரான மனப்போக்கு

(படம்: Paul Rogers © 2017 The New York Times)

 உடற்பருமனாக இருப்போருக்கு எதிரான எண்ணத்தை நம்மில் சிலர் கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான மனப்பான்மை சிறு வயதிலேயே தொடங்குவதாக, அந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்துவோர் கூறுகின்றனர்.

பல நேரங்களில் அந்த மனப்பான்மையை குடும்பங்களும் ஒட்டுமொத்த சமுதாயமும் வலியுறுத்துகின்றன.

வேலை, ஊடகம், கல்வி, குடும்ப உறவுகள் ஆகியவற்றில் உடற்பருமனுக்கு எதிரான மனப்போக்கு பாதிப்புகளை உண்டாக்குகிறது.

ஆயினும், அந்த மனப்போக்கைத் தணிப்பதற்கான முயற்சிகள் சமுதாயத்தில் போதிய அளவில் எடுக்கப்படவில்லை. உடற்பருமனுக்கு எதிரான மனப்போக்கு, அவர்களது எடைக்குறைப்பு முயற்சிகளை பாதித்துவிடுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அவர்கள் எடை குறைந்தாலும் மீண்டும் கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தன்னைத் தானே ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, நல்ல எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பேச்சு, வெளித்தோற்றத்தைக் கடந்த மனதின் நற்குணங்கள் ஆகியவை உடற்பருமனாக இருப்போருக்கு உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

புறத்தோற்றத்தைக் கடந்து அகத்தின் மீது கவனம் செலுத்தி வந்தால் அகத்தின் அழகு புறத்தில் தெரியலாம் அல்லவா?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்