Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தூரிகை பிடிக்கும் தும்பிக்கை

ஹங்கேரியில் நடைபெறும் சர்க்கஸில், இந்திய யானையொன்று வண்ண வண்ண ஓவியங்களை வரைந்து தள்ளுகிறது. 

வாசிப்புநேரம் -
தூரிகை பிடிக்கும் தும்பிக்கை

படம்: REUTERS/Laszlo Balogh

ஹங்கேரியில் நடைபெறும் சர்க்கஸில், இந்திய யானையொன்று வண்ண வண்ண ஓவியங்களை வரைந்து தள்ளுகிறது.

வடிவ அழகு இல்லாவிட்டாலும்கூட, வடிவான யானை வரைந்த ஓவியம் என்பதால் ஆர்வத்தோடு அதை ஏலத்தில் எடுத்துச் செல்கிறார்களாம் யானைப் பிரியர்கள்...

யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன்.

யானை வரைந்தால்? அதற்கு 150 டாலர்.

இது இந்திய யானை சாண்ட்ரா. 40 ஆண்டுகளுக்கு முன் இந்த சர்க்கஸுக்கு 2 வயதுக் குட்டியானையாக வந்தது இது. தூரிகை எடுத்துத் திரைச் சீலையில் ஓவியம் வரைய இதற்கு யாரும் கற்றுத்தரவில்லை.

அதுபோன்ற அசைவுகளை அடிக்கடி தும்பிக்கையில் காட்டியதால், எதேச்சையாக ஒருநாள் அதனிடம் தூரிகையைக் கொடுக்க, வண்ணக் கோடுகளை வரைந்து கொடுத்தது யானை.

தாய்லந்தில், யானைகளை இயல்புக்கு மாறாகப் பழக்கி வற்புறுத்தி ஓவியம் வரைய வைப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால், சாண்ட்ராவைப் பொறுத்தவரை அப்படியில்லை என்கிறார் அதன் பயிற்றுவிப்பாளர் ரிக்டர்.

அது விரும்பினால் மட்டுமே தூரிகையைத் தும்பிக்கையில் எடுக்குமாம். அன்று அதற்கு என்ன மனநிலையோ, அது தூரிகையில் வெளிப்படும்.

அவ்வப்போது அதன் தும்பிக்"கை" வண்ணத்தை ஆகா ஓகோ என்று பாராட்டுவது முக்கியமாம். நாங்கள் செய்வதெல்லாம், அதற்குத் தூரிகையை எடுத்துக் கொடுத்து, ஓவியப் பலகையின்முன் நிறுத்துவது மட்டும்தான் என்கிறார் ரிக்டர்.

ஆனை வரைந்த அழகில் சொக்கிப் போகும் பார்வையாளர்கள் அதை ஏலத்தில் எடுத்துச் செல்கின்றனர். அப்படித் திரட்டப்படும் தொகை, மலேசியக் காடுகளில் உள்ள யானைகளின் மறுவாழ்வுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்