Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கர்ப்ப காலத்தின் கடைசி 3 மாதம்-பெண்கள் ஒருக்களித்துப் படுக்க ஆலோசனை

கர்ப்பிணிகள் படுக்கும் முறை மிகவும் முக்கியம் என்று ஆய்வு வலியுறுத்துகிறது. 

வாசிப்புநேரம் -

கர்ப்பிணிகள் ஆறாவது மாதத்திலிருந்து ஒருக்களித்துப் படுப்பதால், குறைமாதக் குழந்தை பிறப்பதைப் பெரும்பாலும் தவிர்க்கலாமென பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

ஆயிரத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். 

கர்ப்பிணிகள் படுக்கும் முறை மிகவும் முக்கியம் என்று ஆய்வு வலியுறுத்துகிறது. 

தூங்கப் போகும்போது ஒருக்களித்துப் படுப்பதே ஆக முக்கியம். 

தூங்கிய பிறகு காலையில் மல்லாக்கப் படுத்தவாறு எழுவது குறித்து அஞ்சத் தேவயில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். 

ஒருக்களித்துப் படுக்கும் முறையை மேம்படுத்த முதுகு அருகே தலையணை வைத்துக்கொள்ளலாம் என்று ஆலோசனை கூறப்படுகிறது. 

உறங்கப் போகும்போது கர்ப்பிணிகள் ஒருக்களித்துப் படுப்பதால், ஆண்டுக்குச் சுமார் 130 சிசுக்கள் குறை மாதத்தில் பிறந்து மாண்டு போவதைத் தடுக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 

ஒருக்களித்துப் படுப்பதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நன்மை குறித்து இவ்வளவு பெரிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டது இதுவே முதன்முறை. 

இதற்குமுன், நியூசிலந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இதுபோன்ற ஆய்வுகள் சிறிய அளவில் நடத்தப்பட்டுள்ளன. 

அந்த ஆய்வு முடிவையே பிரிட்டிஷ் ஆய்வு முடிவு உறுதி செய்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்