Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வேலையிடத்தில் உடல் எடையைக் குறைப்பது எப்படி?

ஐந்தில் இரண்டு பேர் அலுவலகத்தில் வேலை காரணமாக உடல் எடை அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
வேலையிடத்தில் உடல் எடையைக் குறைப்பது எப்படி?

படம்: Pixabay

ஐந்தில் இரண்டு பேர் அலுவலகத்தில் வேலை காரணமாக உடல் எடை அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

2013இல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று அதனைத் தெரிவித்துள்ளது. உடல் எடையைக் குறைப்பதற்கு 15 நிமிட இலேசான செயல்கள் போதும் என்று Journal of Physical Activity நடத்திய ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

உட்கார்ந்தவாறு வேலை செய்பவர்களைக் காட்டிலும் வேலையிடத்தில் அதிகம் நடப்பவர்களால் மூன்று மடங்கு அதிகக் கலோரிகளைக் குறைக்க முடியும் என்கிறது ஆய்வின் முடிவு.

உட்கார்ந்து வேலை செய்பவர்களைவிட நின்றுகொண்டு வேலை செய்பவர்கள் அதிகக் கலோரிகளைக் குறைக்கலாம் என்பதும் தவறான கருத்து என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இருதரப்பினரும் இழக்கும் கலோரிகள் கிட்டத்தட்ட சம அளவு என்று கூறப்படுகிறது.

மெல்லிய இடை வேண்டும் என்றால் உட்கார்ந்து வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, முறையான உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் உற்சாகம் அடைவது மட்டுமல்லாமல், வேலையிடத்தில் நமது ஆற்றலும் கூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

முயன்றுதான் பார்க்கலாமே!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்