Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சலவை வேலைகளில் உதவிக் கரம் நீட்ட இயந்திர மனிதக் கருவிகள்!

சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பெரிய தொலைத்தொடர்புச் சேவை நிறுவனமான StarHub, இயந்திர மனிதக் கருவி தொடர்பான புதிய முயற்சியில் ஈடுபடவுள்ளது. 

வாசிப்புநேரம் -
சலவை வேலைகளில் உதவிக் கரம் நீட்ட இயந்திர மனிதக் கருவிகள்!

(படம்: Najeer Yusof/TODAY)

சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பெரிய தொலைத்தொடர்புச் சேவை நிறுவனமான StarHub, இயந்திர மனிதக் கருவி தொடர்பான புதிய முயற்சியில் ஈடுபடவுள்ளது.

ஹோட்டல்களில் சலவை செய்யும் முறையைச் சீரமைப்பதற்காக Aethon TUG இயந்திர மனிதக் கருவிகளை அறிமுகம் செய்ய உள்ளது StarHub.

அதனுடன் இணைந்து செயல்பட உள்ளது ST Kinetics.

Capri By Frasers Changi City Point, Four Points by Sheraton, Grand Copthorne Waterfront ஆகிய மூன்று ஹோட்டல்களில் இயந்திர மனிதக் கருவிகள் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.

மேலும் 17 ஹோட்டல்களில் கருவிகளை அறிமுகப்படுத்தும் பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்துவருகின்றன.

ஹோட்டலுக்குள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சுயமாக செல்லும் ஆற்றல் இயந்திர மனிதக் கருவிக்கு உண்டு.

கதவுகளைத் திறப்பது, மின்தூக்கியைப் பயன்படுத்துவது போன்ற திறனையும் மனித இயந்திரக் கருவி பெற்றுள்ளது.

சலவை செய்ய வேண்டிய துணிகளை வெவ்வேறு அறைகளுக்குக் கொண்டு செல்ல இயந்திர மனிதக் கருவிகள் பயனுள்ளவையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதனால் ஊழியர்களுக்கு மற்ற வேலைகளில் கவனம் செலுத்த நேரம் கிடைக்கும் என்று StarHub, ST Kinetics நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்