Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சால்மன் - நீரிழிவு, இதயநோயிலிருந்து பாதுகாப்பு

உணவில் சால்மனைச் சேர்த்துக்கொள்வதால் நீரிழிவு நோயாளிகளும், இதய நோயாளிகளும் நன்மையடையலாம் என்று கூறப்படுகிறது.

வாசிப்புநேரம் -

ஆரோக்கிய உணவை ஆதரிப்பவரா நீங்கள்?

சால்மன் மீன் ஒரு முழுமையான ஆரோக்கிய உணவாகக் கருதப்படுகிறது.

உணவில் சால்மனைச் சேர்த்துக்கொள்வதால் நீரிழிவு நோயாளிகளும், இதய நோயாளிகளும் நன்மையடையலாம் என்று கூறப்படுகிறது.

சால்மனில் நம் ஆரோக்கியத்துக்குத் தேவையானவை என்னென்ன இருக்கின்றன?

  • வைட்டமின்- D
  • ஒமேகா 3 வகைக் கொழுப்புச் சத்து
  • புரதச் சத்து
  • தாதுப் பொருள்கள் - செலினியம்(selenium), துத்தநாகம்(zinc), பாஸ்ஃபரஸ்(phosphorus), கால்சியம், இரும்புச் சத்து.

எவற்றிலிருந்து பாதுகாப்பு?

1. நீரிழிவு:

2. இதயநோய்:
சால்மனில் இருக்கும் நல்ல கொழுப்பான ஒமேகா 3 தான் இதன் சிறப்பே. அது இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.

3. மூட்டுவலி:
வாரத்துக்கு இரண்டு முதல் நான்கு முறை, 85லிருந்து 170 கிராம் வரை உட்கொண்டால் மூட்டு வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.

அதனால் மூட்டுவலி சிகிச்சையிலும் இந்த மீன் உதவுகிறது.

பிற நன்மைகள்:
சால்மனை அடிக்கடி சாப்பிட்டால் மூளைக்கும், கண்ணுக்கும்கூட நல்லதாம்.

மலக்குடல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்களுக்கு எதிரான பாதுகாப்பும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

சால்மனை அதிகம் சாப்பிடுபவர்கள் நல்ல உறக்கம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.

எப்படிச் சாப்பிடலாம்?

  • கொதிக்கும் நீரில் வேகவைத்தல்
  • நீராவியில் வேகவைத்தல்
  • தீயில் வாட்டுதல்   எனப் பல வகையான முறைகளில் சால்மனைச் சமைத்து உண்ணலாம்.

சால்மன் சுஷி மிகவும் பிரபலமான உணவு.

ஆனால் சால்மனை சமைக்காமல் அப்படியே Salad- இல் சேர்த்து சாப்பிடுவது தனி ருசி என்கின்றனர் சிலர்.

சால்மன் எந்த அளவு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவு ஊட்டச்சத்து நிரம்பியது என்பது நம்பிக்கை.

பண்ணையில் வளர்க்கப்பட்ட சால்மனை விட இயற்கையாகக் கடலில் பிடிக்கப்படும் சால்மன், உடலுக்கு அதிக நன்மை தருவதாக நம்பப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்