Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

மென்பொருள் தவற்றால் உயிரோடிருப்போரைக் காலமானோராகக் காட்டிய ஃபேஸ்புக்

மென்பொருளில் ஏற்பட்ட பிழையொன்றின் காரணமாக உயிரோடிருக்கும் பலரைக் காலமானவர்களாகக் காட்டியது ஃபேஸ்புக். அந்தத் தவறு நேற்று (நவம்பர் 11) நடந்தது.

வாசிப்புநேரம் -
மென்பொருள் தவற்றால் உயிரோடிருப்போரைக் காலமானோராகக் காட்டிய ஃபேஸ்புக்

Mark Zuckerbergஐக் காலமானவர்களாகக் காட்டிய அவரது ஃபேஸ்புக் பக்கம். (படம்: Facebook)

மென்பொருளில் ஏற்பட்ட பிழையொன்றின் காரணமாக உயிரோடிருக்கும் பலரைக் காலமானவர்களாகக் காட்டியது ஃபேஸ்புக். அந்தத் தவறு நேற்று (நவம்பர் 11) நடந்தது.

இதனால் பாதிக்கபட்டவர்கள், தங்கள் பக்கங்களில் தாங்கள் நலமாய் இருப்பதாகக் குறிப்பிடவேண்டிய சூழல் உண்டானது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் MarK Zuckerbergஐக் கூட விட்டுவைக்கவில்லை இந்தப் புதிய மென்பொருள் பிழை.

தவறு சரிசெய்யப்பட்டுவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. இவ்வளவு பெரிய தவற்றை இழைத்தற்கு அது மன்னிப்பையும் கேட்டுக்கொண்டது.

சென்ற ஆண்டு ஃபேஸ்புக்கில் இந்த நினைவஞ்சலி அம்சம் தொடங்கபட்டது.

காலமானவர்களின் ஃபேஸ்புக் பக்கங்களை அணுகுவதற்குப் பல குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து அது நிறுவபட்டது.

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள், காலமான பின்னர், அவர்களின் பக்கங்களை நினைவஞ்சலிகளாக மாற்றுவதற்கு முன்கூட்டியே தெரிவிக்கலாம். அல்லது தங்கள் பக்கங்களை நீக்குவதற்கும் ஏற்பாடு செய்யலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்