Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பணம் மாற்றுவதைச் சுலபமாக்கியுள்ளது ஜீமெயில் (Gmail) செயலி

ஆண்டிராய்டு கைபேசிகளுக்கான ஜீமெயில் கைபேசிச் செயலி வாயிலாகப் பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என கூகள் அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஆண்டிராய்டு கைபேசிகளுக்கான ஜீமெயில் கைபேசிச் செயலி வாயிலாகப் பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என கூகள் அறிவித்துள்ளது.
புதிய சேவையைப் பயன்படுத்த ஜீமெயில் மின்னஞ்சல் முகவரி வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. அது நேற்றிலிருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ஆனால், தற்போது அமெரிக்காவில் உள்ளவர்கள் மட்டுமே அதனைப் பயன்படுத்த முடியும்.

பணம் செலுத்த இன்னொரு செயலியைப் பதிவிறக்கம் செய்யாமல் அந்த மின்னஞ்சல் வாயிலாகவே பணத்தைப் பெற முடியும்.

அவர்கள் பெறும் பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கிலிருந்து பெற்றுகொள்ளும்படியும் அவர்கள் ஏற்பாடு செய்யலாம்.

மேலும், இந்தச் சேவை முற்றிலும் இலவசம்.

பணத்தை அனுப்பவும் பெறவும் அனைத்து நடவடிக்கைகளையும் செயலி வாயிலாகவே செய்யலாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்