Images
  • 16may mp3

விரைவில் முடிவுக்கு வரும் MP3 யுகம்

1980களிலிருந்து MP3 எனும் வார்த்தையைக் கேட்டு நம்மில் பலர் வளர்ந்திருப்போம்.

பாடல்களைப் பதிவிறக்கம் செய்ய பயன்படுத்தப்பட்ட ஒலி முறைகளுள் மிகப் பிரபலமானது MP3 முறை.

பல ஆண்டுகளாக, பயனீட்டாளர்களின் விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பெருமையும் MP3 முறையைச் சாரும்.

ஆனால், காலம் மாற மாற, தொழில்நுட்ப வளர்ச்சியும் முன்னேறிவிட்டது.

அதற்கேற்ப, பல்வேறு மேம்பட்ட ஒலி முறைகளும் அறிமுகம் கண்டுள்ளன.

அவை MP3 முறையைக் காட்டிலும் தரத்திலும் ஆற்றலிலும் மேம்பட்டவை.

அதனால், பயனீட்டாளர்களிடையேMP3 முறையின் மோகமும் காலப்போக்கில் குறைந்துவிட்டதால், அதனை உருவாக்கிய நிறுவனம், MP3 முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவிருக்கிறது.

பயனீட்டாளர்கள் தொடர்ந்து, MP3 முறையிலுள்ள பாடல்களைக் கேட்கலாம். ஆனால், இனி வரும் காலத்தில் அந்த முறையில் பாடல்களைப் பதிவிறக்கம் செய்யமுடியாது.

ஒலித் துறையில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்த MP3 முறைக்குக் கூடியவிரைவில் குட் பை! 

உங்கள் கருத்து

Top