Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தின் குறைகூறலை ஏற்றுக்கொள்ள முடியாது

ஆப்பிள் நிறுவனம் தம்மீது விதிக்கப்பட்ட அபராத வரியை எதிர்த்துக் குறைகூறியிருப்பதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஆப்பிள் நிறுவனத்தின் குறைகூறலை ஏற்றுக்கொள்ள முடியாது

(படம்: AFP Photo / Christof Stache)

ஆப்பிள் நிறுவனம் தம்மீது விதிக்கப்பட்ட அபராத வரியை எதிர்த்துக் குறைகூறியிருப்பதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியிருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐயர்லந்துக்குக் குறைவாக வரி செலுத்தியதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டித்தன்மை அதிகாரிகள் 14.8 பில்லியன் அமெரிக்க டாலர் அபராத வரி விதித்து தீர்ப்பளித்தனர். அந்தத் தீர்ப்பு நேற்று முன் தினம் அளிக்கப்பட்டது.

தீர்ப்பு அரசியல் ஆதாயத்துடன் அளிக்கப்பட்டுள்ளது என்று ஆப்பிள் நிறுவனம் குறைகூறியது. அது அர்த்தமற்றது என்றார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்.

அதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஒன்றியம், ஆப்பிள் நிறுவனம் தனது சொந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீடுகளைச் செய்கிறது; அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்