Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

தவறான வாட்ஸ்ஏப்பா? இனி கவலையில்லை!

நம்மில் எத்தனை பேர் தவறான செய்தியைத் தவறான நபருக்கு வாட்ஸ்ஏப் அனுப்பியிருப்போம்? 

வாசிப்புநேரம் -

நம்மில் எத்தனை பேர் தவறான செய்தியைத் தவறான நபருக்கு வாட்ஸ்ஏப் அனுப்பியிருப்போம்?

பின் அதே வாட்ஸ்ஏப் வழி 'சாரி சாரி' என்று மன்னிப்பு கேட்டு வெட்கப்பட்டிருப்போம்?

அதுபோன்ற சிறு சிறு சங்கடங்களுக்கெல்லாம் முடிவு காணும் நோக்கில் வாட்ஸ்ஏப் புது அம்சம் ஒன்றைக் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

அனுப்பிய செய்தியை மீட்டுக்கொள்ளும் வசதிதான் அந்தப் புதிய அம்சம்.

அனுப்பிய செய்தியைத் தொடர்ந்து அழுத்தும்போது சில தெரிவுகள் காட்டப்படும்.

அதில் ‘revoke’ என்பதைத் தேர்வுசெய்வதன் மூலம் செய்தியை அழித்துவிடலாம்.

முக்கியமாக, வாட்ஸ்ஏப்பைப் பெற்ற நபர் அந்தச் செய்தியைப் படிக்கும் முன்னே அதை அழித்துவிடவேண்டும்.

இல்லையென்றால் மீண்டும் 'சாரி சாரி'....
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்