Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

வாட்ஸாப் செயலியைப் பயன்படுத்துவோரின் தொலைபேசி எண்கள் ஃபேஸ்புக்குடன் பகிர்வு

பிரபலத் தகவல் தொடர்புச் செயலியான வாட்ஸாப் (Whatsapp) இப்போது அதன் சேவையைப் பயன்படுத்துவோரின் தொலைபேசி எண்களை வாட்ஸாப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் (Facebook) பகிர்ந்து கொள்ளும்.

வாசிப்புநேரம் -
வாட்ஸாப் செயலியைப் பயன்படுத்துவோரின் தொலைபேசி எண்கள் ஃபேஸ்புக்குடன் பகிர்வு

(படம்: Reuters)

பிரபலத் தகவல் தொடர்புச் செயலியான வாட்ஸாப் (Whatsapp) இப்போது அதன் சேவையைப் பயன்படுத்துவோரின் தொலைபேசி எண்களை வாட்ஸாப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் (Facebook) பகிர்ந்து கொள்ளும்.
இதனால் பயனீட்டாளர்கள், ஃபேஸ்புக் பக்கத்தில் தங்கள் பயன்பாட்டு நடவடிக்கைகளைத் தழுவிய, குறிப்பிட்ட விதமான விளம்பரங்களைக் காணக்கூடும். மக்களின் தனிப்பட்ட தகவல்கலைப் பாதுகாத்து வந்த வாட்ஸாப்புக்கு இது ஒரு புதிய மாற்றம்.

ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட பயனீட்டாளர்களைக் கொண்டுள்ள இந்தச் செயலியை 21.8 பில்லியன் டாலருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் ஈராண்டுகளுக்கு முன் வாங்கியது. வாட்ஸாப் செயலி மூலம் ஆதாயம் ஈட்டும் திட்டத்தில் இந்த முயற்சியும் ஒன்று.மற்ற

நிறுவனங்களும் இந்தச் சேவை மூலம் தங்கள் வாடிக்கையாளர்களை அணுகலாம் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

விளம்பரங்கள் அடிக்கடி தோன்றுவதை விரும்பாதவர்கள் தங்கள் திறன்பேசிகளில் இந்த மாற்றத்தைத் தடை செய்யலாம்.

பொதுமக்கள் இந்த புது மாற்றத்தை ஏற்றுக்கொள்ள அல்லது அதை நிராகரிக்க முப்பது நாட்கள் அவகாசம் உள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்