Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

முப்பரிமாண அச்சடிக்கும் முறை தலைமுடிப் பிரச்சினைக்குத் தீர்வா?

தலைமுடி உதிர்வது, வழுக்கை வருவது முதலியவற்றைச் சில நேரங்களில் தவிர்க்க முடியாதது. தொழில்நுட்பத்தின் உதவியோடு இந்தப் பிரச்சினைக்குக் கூடிய விரைவில் தீர்வுகாண முனைகிறது L'Oreal நிறுவனம்.

வாசிப்புநேரம் -
முப்பரிமாண அச்சடிக்கும் முறை தலைமுடிப் பிரச்சினைக்குத் தீர்வா?

(படம்: Reuters)

தலைமுடி உதிர்வது, வழுக்கை வருவது முதலியவற்றைச் சில நேரங்களில் தவிர்க்க முடியாதது. தொழில்நுட்பத்தின் உதவியோடு இந்தப் பிரச்சினைக்குக் கூடிய விரைவில் தீர்வுகாண முனைகிறது L'Oreal நிறுவனம்.

மயிர்க்கால்கள் முப்பரிமாண அச்சடித்தலின் மூலம் உருவாக்கப்படும்.

Poietis, எனும் ஃபிரெஞ்ச்சு நிறுவனத்தோடு இணைந்து L'Oreal இந்தக் கண்டுபிடிப்பைச் செய்துள்ளது.

ஆனால் இந்த முறையை மேம்படுத்தி தலையில் பொருத்தக்கூடிய வகையில் முடியைத் தயாரிப்பதற்கு இன்னும் மூன்றாண்டு எடுக்கும்.

இந்தப் புதிய கண்டுபிடிப்பு முறை தலைமுடியைப் பற்றி அறிவியல் ரீதியாக மேலும் தெரிந்துகொள்ள உதவும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

இது போன்ற தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மருத்துவ ரீதியாகத் தலைமுடி உதிர்பவர்களுக்குப் பெரிதும் உதவும் என நம்பப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்