Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

சாம்சுங் கேலக்ஸி நோட் 7 கைபேசி: கோளாற்றைச் சரிசெய்ய அதிக செலவு

கேலக்ஸி நோட் 7 கைத்தொலைபேசிகளில் ஏற்பட்ட மின்கலக் கோளாற்றைச் சரிசெய்ய சாம்சுங் நிறுவனம் 1 பில்லியன் டாலர் செலவிட நேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

கேலக்ஸி நோட் 7 கைத்தொலைபேசிகளில் ஏற்பட்ட மின்கலக் கோளாற்றைச் சரிசெய்ய சாம்சுங் நிறுவனம் 1 பில்லியன் டாலர் செலவிட நேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் ஏற்கனவே உள்ள இரண்டரை மில்லியன் கைத்தொலைபேசிகளை சாம்சுங் நிறுவனம் மாற்றிக் கொடுக்க வேண்டியிருக்கும். 

கைத்தொலைபேசிகளை மாற்றிக் கொடுப்பதற்கான செலவால் தான் வேதனையடைந்துள்ளதாகக் கூறுகிறது சாம்சுங்.

ஆனால் இந்தச் செலவை நிதியிழப்பாக மட்டும் பார்க்கக்கூடாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

சந்தையில் தனது மதிப்பைக் கட்டிக்காக்க அந்தத் தொகையை சாம்சுங் செலவிடுவது அவசியம் என்று அவர்கள் கருதுகின்றனர். 

கேலக்ஸி நோட் 7 கைத்தொலைபேசிகளில் மின்கலக் கோளாறு ஏற்பட்டதைத் தொடந்து கடந்த வெள்ளிக்கிழமை அவை மீட்டுக்கொள்ளப்பட்டன. 

கோளாற்றால் 30க்கும் அதிகமான கைத்தொலைபேசிகள் தீப்பற்றின. 

திறன்பேசிச் சந்தையில் தனது முன்னணி இடத்தை நிலைநிறுத்த சாம்சுங் முயன்றுவந்த வேளையில் அதற்கு இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

போட்டி நிறுவனமான ஆப்பிள் அதன் ஆகப் புதிய கைத்தொலைபேசியை இவ்வாரம் விற்பனைக்கு விடத் திட்டமிட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்