Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சிறந்த வார இறுதிக்குச் சில குறிப்புகள்

வார நாட்களில் நம்மில் பலர், வேலை செய்வோம். வார இறுதி நாட்களில் சற்று இளைப்பாறுவோம். வார இறுதி நாட்களைச் சரியாகத் தொடங்க இதோ சில குறிப்புகள். 

வாசிப்புநேரம் -
சிறந்த வார இறுதிக்குச் சில குறிப்புகள்

படம்: Samuel Foster/Unsplash

வார நாட்களில் நம்மில் பலர், வேலை செய்வோம். வார இறுதி நாட்களில் சற்று இளைப்பாறுவோம். வார இறுதி நாட்களைச் சரியாகத் தொடங்க இதோ சில குறிப்புகள்.

அதிகமான நேரம் தூங்க வேண்டாம்

வார இறுதி நாட்களில், சற்று அதிகமாகத் தூங்கலாம் என உள்ளம் ஏங்கும். ஆனால், அதற்கு நீங்கள் இடமளிக்கக் கூடாது. வார இறுதி நாட்களில், நீங்கள் அதிகம் தூங்கினால், வார நாட்களில் உறக்கம் கொள்வதற்கும் எழுவதற்கும் சிரமமாக இருக்கும்.

ஒரு முறையாவது உடற்பயிற்சி செய்யவேண்டும்

வார இறுதி நாட்களில் குறைந்தது 75 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யுங்கள். வார நாட்களில், நீங்கள் உடற்பயிற்சி செய்யத் தவறினால், அதனை வார இறுதி நாட்களில் செய்து சரிகட்டி விடலாம்.

தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்ளவேண்டும்

குறைந்தது 10 நிமிடங்கள் வெளியே சென்று மற்றவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்களின் அறிவாற்றலும் வேலை செயல்திறனும் மேம்படும் என்று கூறப்படுகின்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்