Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

காலம் பொன்னானது

காலம்.. கண்ணிமைக்கும்நேரத்தில்காணாமல்போய்விடும் நிறுத்திவைக்கலாம்என்றுஎத்தனைமுறைநினைத்துப்பார்க்கிறோம். முடிகிறதா?

வாசிப்புநேரம் -

காலம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போய்விடும்
நிறுத்திவைக்கலாம் என்று எத்தனை முறை நினைத்துப் பார்க்கிறோம். முடிகிறதா?

நேரம் பறக்கிறது.. நாமும் பறந்து பறந்து வேலை செய்கிறோம்.
எந்த நேரமும் பரபரப்பு.

ஆனாலும் நேரமில்லை. இந்தப் புலம்பல் ஓய்வதில்லை.

முன்பிருந்த அதே 24 மணிநேரம்தான் இப்போதும்.

அன்று யாரும் இந்த அளவுக்குப் புலம்பியதாக எனக்கு நினைவில்லை.

இன்று புலம்பாதோர் இல்லை.

இந்தத் தேதிக்குள், நேரத்திற்குள் இதை முடிக்க வேண்டும். இல்லையென்றால் தொலைந்தேன்.

இது மூளைக்குள் நுழைந்த கணமே உடலுக்குள் ஏதோ ஒரு மாற்றம். இரத்தம் ஜிவ்வென ஏறும். கைகால் பரபரக்கும்.

அன்றாடப் பணிகள் அதிகமா? காலத்தைத் திட்டமிட நமக்குத்தான் தெரிவதில்லையா?

இருக்காது என்றே தோன்றுகிறது.

காலையில் எழுந்தால் இரவில் படுக்கச் செல்லும் வரை காலில் வெந்நீரைக் கொட்டியது போன்ற பரபரப்பு.

எங்கும் தொழில்நுட்பத்தின் தாக்கம். அப்படியென்றால் வேலை விரைவாக முடிந்து அதிக நேரம் இருக்க வேண்டுமே.. என்னவாயிற்று?

எங்கோ... ஏதோ சரியில்லை. இப்படி நான் பலமுறை யோசித்திருக்கிறேன்.
இது கண்டிப்பாக வெளியில் இல்லை. எனக்குள்... ஏதோ ஒன்று..

எதிர்பார்ப்புகளுக்கேற்ப என்னுள் காலக் கடிகாரம் இயங்க மறுக்கிறதா?
யோசித்தேன்..

காலவேகத்துக்கு ஈடுகொடுக்க என்னை நானே தயார் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம்.

அது எளிதல்லதான். வேறு வழியில்லை. ஆரம்பத்தில் இருந்ததைவிட இப்போது சமாளிக்க முடிகிறது.

முடியும் என்று நினைத்து ஆரம்பித்தேன்... முடிகிறது.

பரபரப்பு தேவையில்லை என்பதைப் போகப்போக உணர ஆரம்பித்தேன்.

ஒரு செயலைப் பரபரப்புடன் வேகவேகமாய்ச் செய்வதைவிட பொறுமையாய்ச் செய்யும்போது அது முழுமையாய், நிறைவாய் அமைவதை உணர்ந்தேன்.

ஆரம்பத்தில் அதிக நேரமாவது போல் தெரியும். போகப்போக... பழகப்பழக.. விரைவாகவும் நேர்த்தியாகவும் செய்ய முடிகிறது.

ஒரு நாளில் 24 மணிநேரம் போதவில்லையே, இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் அதிக வேலை செய்யலாமே என்று சொல்பவர்களுக்கு இது உதவலாம்.

திட்டமிட்டுச் செயல்பட்டால் நேரம் தாராளமாகப் போதும் என்றே தோன்றுகிறது.

எதை, எப்போது செய்யலாம் என்று முடிவுசெய்து, அதைப் புத்திசாலித்தனமாகச் செய்யும்போது நேரம் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

காலம் பொன் போன்றது. அதை நம் கண் போல் காக்கலாமே!


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்