Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

சுய(அ)ரூபம்

சுய(அ)ரூபம் சுயரூபம் : ஒருவரின் உண்மையான இயல்பு அல்லது தன்மை சுயஅரூபம் : ஒருவர் தனது உண்மையான இயல்பை, தன்மையை இழப்பது அல்லது இல்லாமல் இருப்பது

வாசிப்புநேரம் -

சுயரூபம் : ஒருவரின் உண்மையான இயல்பு அல்லது தன்மை

சுயஅரூபம் : ஒருவர் தனது உண்மையான இயல்பை, தன்மையை இழப்பது அல்லது இல்லாமல் இருப்பது

இன்றைய வாழ்க்கையில், நாம் அனைவரும் பலவற்றை இழக்கிறோம்.

காலம், நேரம், சக்தி, பணம், கட்டுப்பாடு, பொறுமை, கோபம், நட்பு, உறவு...
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

அவ்வப்போது, என்னிடம் நான் கேட்கும் ஒரு கேள்வி. இவற்றை எல்லாம் நாம் இழக்கும்போதுதானே நமது சுயரூபம் வெளிப்படுகிறது?

அதற்கான பதில், நிச்சயமாக.
தேவையானவை என நாம் நினைப்பனவற்றை நாமோ மற்றவர்களோ இழக்கும்போதுதான் நமது சுயரூப நிலையை எட்டுகிறோம்.

ஒவ்வொரு நாளும் நாம் வாழும் வாழ்க்கையில் தெரிவதல்ல நமது சுயரூபம்.
அது சுயஅரூபம்.
மற்றவர்களுக்காக நம்மை வெளிக்காட்டாமல் இருப்பது. நமது தன்மைகளை மறைப்பது. நமது உண்மையான இயல்புகளை அடக்குவது.
ஏன் அப்படி?

ஒருவர் வெற்றியடையும்போது, சிலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சிலருக்கு ஆதங்கமாக இருக்கும்.
ஒரு சிலருக்கு எரிச்சலாக இருக்கும். மற்றவர்களுக்கு அக்கறையே இருக்காது.

தோல்வியடையும்போது, துன்பப்படுவோரும் இருக்கிறார்கள். மகிழ்ச்சியடைபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

நாம் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதில்தான் நமது இயல்பு இருக்கிறது.

தோல்வியடையும்போது அமைதியாக இருக்கலாம். ஆர்ப்பாட்டம் செய்யலாம். அதுவே, வெற்றியடையும்போது... அனைத்தும் தலைகீழாய் மாறும்.
கர்வம் தலைதூக்கலாம் அல்லது அடக்கம் நிலைபெறலாம்.

எது நாம்?
எது நம்மைப் பிரதிபலிக்கிறது?
அதில்தான் நமது பதில், சுயரூபம் அடங்கியுள்ளது.

வாழ்க்கை என்ற ஓட்டத்தில், கூட்டமாக நாம் பயணம் செய்யும் தருணங்களில், அனைவரது சுயமும் அரூபமாகத்தான் இருக்கும்.

என்று நாம் ஒரு படி ஏறுகிறோமோ, ஒரு படி இறங்குகிறோமோ அன்றே வெளிப்படும் சுயரூபம்.
அதுவரை நிலைத்திருப்பது சுயஅரூபம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்