Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுற்றுப்புறப் பாதுகாப்பில் இளையர்களின் பங்கு அவசியம்: மசகோஸ் ஸுல்கிஃப்லி

சுற்றுப்புறப் பாதுகாப்புக் குறித்த யோசனைகளை இளையர்கள் பரிமாறிக் கொள்வது முக்கியம். அது, சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இளையர்களை ஊக்குவிக்கும்.

வாசிப்புநேரம் -
சுற்றுப்புறப் பாதுகாப்பில் இளையர்களின் பங்கு அவசியம்: மசகோஸ் ஸுல்கிஃப்லி

மசகோஸ் ஸூல்கிஃப்லி (Masagos Zulkifli).

சிங்கப்பூர்: சுற்றுப்புறப் பாதுகாப்புக் குறித்த யோசனைகளை இளையர்கள் பரிமாறிக் கொள்வது முக்கியம். அது, சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இளையர்களை ஊக்குவிக்கும்.நீடித்து நிலைக்கக் கூடிய சுற்றுப்புறத்தை உருவாக்குவதில் இளையர்களின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தவும் அது அவசியம்.

ஆசியான் பிளஸ் 3 இளையர் சுற்றுப்புறக் கருத்தரங்கின்போது சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் திரு. மசகோஸ் ஸுல்கிஃப்லி அதனைத் தெரிவித்தார். முதன்முறையாகச் சிங்கப்பூர் அந்த 3-நாள் கருத்தரங்கை ஏற்று நடத்துகிறது. சிங்கப்பூரோடு, ஏனைய ஆசியான் நாடுகளையும் சீனாவையும் சேர்ந்த சுமார் 150 இளையர்கள் அதில் பங்கேற்கின்றனர்.

சமூகங்களும் நிறுவனங்களும் எவ்வாறு சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க முடியும் என்பது பற்றி அவர்கள் விவாதிக்கின்றனர்.குப்பையைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கை முறையை நீக்குப்போக்குடன் மாற்றியமைக்கலாம் எனக் கூறினார் திரு. மசகோஸ்.

இளமையிலேயே அந்த எண்ணத்தை விதைப்பது அதிகப் பயன் தரும் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்