Images
  • 0908 seagames

தென்கிழக்காசிய விளையாட்டுகளின் ஒளிபரப்பு : Toggle, okto

மலேசியாவில், 29ஆவது தென்-கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன.

11 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் கோலாலம்பூர் செல்லத் தயாராகி வருகின்றனர்.

அவர்களுடன், பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்களையும், சுற்றுப் பயணிகளையும் மலேசியா எதிர்பார்க்கிறது.

இந்த மாதம் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளை மீடியாகார்ப்பின் மின்னிலக்கச் சேவையான Toggle-வழியாகவும், Okto-ஒளிவழியிலும் கண்டு ரசிக்கலாம்.


3-நேரடி ஒளி-வழிகளுக்கு Toggle ஏற்பாடு செய்யவிருக்கிறது. போட்டிகளைக் காணத் தவறியோர், Toggle-இன் தேவைக்கேற்ப வழங்கும் சேவை வழியாகப் பின்னர் அவற்றைக் காண முடியும்.

அடுத்த திங்கட்கிழமையிலிருந்து Team Singapore-காற்பந்துப் போட்டிகளை Toggle-வழியாகக் காணலாம்.

29ஆவது தென்-கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை, இம்மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை Okto Sports ஒளிபரப்பில் காணலாம்.

வார நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார இறுதியில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் போட்டிகளைக் காண இயலும்.  

உங்கள் கருத்து

Top