Images
  • durian
    (படம்:Duke-NUS Medical School/NCCS)

டுரியனின் "நறுமணத்திற்கு" காரணம் கண்டுபிடித்த சிங்கப்பூர் ஆய்வுக் குழு

தேசியப் புற்றுநோய் நிலையத்தின் துணைத் தலைவரான பேராசிரியர் தே பின் தீயென் டுரியன் பிரியர்.

அதனால், அந்தப் பழத்தின் முழுமையான மரமணுத் தொடரை வரிசைப்படுத்தும் ஆர்வம் அவருக்குப் பிறந்தது.

டுரியனின் மணம், சுவை, முட்கள் கொண்ட அதன் தோல் ஆகியவற்றுக்கான காரணத்தை அறிய அவர் முனைந்தார்.

அடையாளம் தெரியாத டுரியன் பிரியர்கள் வழங்கிய $500,000 நிதியுதவியுடன் ஓர் ஆய்வுக் குழுவை நிறுவினார் அவர். 

அவர்கள் செய்த ஆராய்ச்சியில் டுரியன் பழங்களுக்கு 46,000 மரபணுக்கள் இருக்கின்றன என்பது தெரியவந்தது. 

ஒப்புநோக்க, மனிதர்களுக்கு 23,000 மரபணுக்கள் மட்டுமே.

டுரியனின் மணம் கந்தகத்தை (sulphur) உற்பத்தி செய்யும் மரபணுவால் ஏற்படுகிறது.

டுரியனின் உள்ள சர்க்கரை அளவைத் தீர்மானிக்கும் மரபணுவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

ஆகவே, எதிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வகையில் சர்க்கரைச் சத்து குறைந்த டுரியன்களை உருவாக்க முடியுமென்று பேராசிரியர் தே நம்பிக்கை தெரிவித்தார். 

டுரியனின் மரபணு பற்றிய தகவலை தேசியப் பூங்காக் கழகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது ஆய்வுக் குழு. 

சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் டுரியன் தொடர்பான மேற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள அது உதவுமென்பது ஆய்வுக் குழுவின் எதிர்பார்ப்பு.



 

உங்கள் கருத்து

Top