Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

10,000 புதிய வீடுகளில் தண்ணீரைச் சேமிக்கும் குளியலறைக் கருவிகள் பொருத்தப்படும்

பொதுப் பயனீட்டுக் கழகம், "Smart Shower" திட்டத்தின் கீழ், 10,000 புதிய வீடுகளில் தண்ணீரைச் சேமிக்கும் குளியலறைக் கருவிகளைப் பொருத்தவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
10,000 புதிய வீடுகளில் தண்ணீரைச் சேமிக்கும் குளியலறைக் கருவிகள் பொருத்தப்படும்

(படம்: AFP)

பொதுப் பயனீட்டுக் கழகம், "Smart Shower" திட்டத்தின் கீழ், 10,000 புதிய வீடுகளில் தண்ணீரைச் சேமிக்கும் குளியலறைக் கருவிகளைப் பொருத்தவிருக்கிறது.

அவற்றைத் தயாரித்து விநியோகிக்க Amphiro, Smart and Blue ஆகிய நிறுவனங்களைக் கழகம் நியமித்துள்ளது.

ஆசியாவிலேயே முதலாவதாக அத்தகைய கருவிகள் சிங்கப்பூரில் பொருத்தப்படவிருக்கின்றன.

அவற்றைச் சோதித்துப் பார்த்ததில், குடியிருப்புகள் 20 விழுக்காடு வரையிலான தண்ணீரைச் சேமிக்கலாம் என்பது தெரியவந்ததாகக் கழகம் கூறியது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும், பொதுப் பயனீட்டுக் கழகமும் இணைந்து அந்தக் கருவிகளைச் சோதித்தன.

உடனுக்குடன் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நாள் ஒன்றுக்கு ஒரு நபர் 5 லிட்டர் தண்ணீர் வரை சேமிக்கலாம் என்று தெரியவந்தது.

புதிய கருவிகளைப் பயன்படுத்தினால் குடியிருப்புகளின் மாதாந்தரத் தண்ணீர்க் கட்டணத்தில் சுமார் 3 விழுக்காடு வரை குறைய வாய்ப்பு இருப்பதாகக் கழகம் கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்