Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய iPhone 8இன் அதிநவீன அம்சங்கள்

நாளை அறிமுகமாகவிருக்கின்றன iPhone 8, iPhone 8 Plus. தற்போது உள்ள iPhone 7, iPhone 7 Plus வடிவங்களில் மேம்படுத்தப்பட அம்சங்களுடன் புது iPhoneகள் இருக்கும் என நம்பப்படுகிறது.

வாசிப்புநேரம் -
புதிய iPhone 8இன் அதிநவீன அம்சங்கள்

(படம்: Channel NewsAsia)

நாளை அறிமுகமாகவிருக்கின்றன iPhone 8, iPhone 8 Plus. தற்போது உள்ள iPhone 7, iPhone 7 Plus வடிவங்களில் மேம்படுத்தப்பட அம்சங்களுடன் புது iPhoneகள் இருக்கும் என நம்பப்படுகிறது. iPhone X எனப்படும் உயர்தர வடிவமும் அறிமுகமாகவிருக்கிறது. புதிய வடிவங்களைப் பற்றி நம் காதில் விழுந்த சில தகவல்கள் இதோ:

புது வடிவம்: திறன்பேசியின் முன்புறம் தொடுதிரையாக மாற்றப்படும். திறன்பேசியின் பின்புறம் iPhone 4ஐப் போல கண்ணாடியில் செய்யப்பட்டிருக்கும்.

மேம்பட்ட திரை: புதிய iPhoneஇல் காட்சித் திரை மேம்பட்டிருக்கும். OLED காட்சித் திரையில் படங்கள், பிரகாசமாகவும், தெள்ளத் தெளிவாகவும் இருக்குமாம். அது மட்டுமல்லாமல் திரையில் அளவும் சற்று பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொத்தான்கள் இல்லை: தற்போதைய iPhone வடிவங்களில் இருக்கும் 'Home' பொத்தான் புதிய iPhone X வடிவத்திலிருந்து அகற்றபடும் எனப் பெரிதும் எதிர்பார்க்கபடுகிறது.

கைரேகை அடையாள அம்சம்: Touch ID எனப்படும் கைரேகை அடையாள அம்சமும் அகற்றப்படுகிறது. 'Home' பொத்தானில் இருந்த அம்சம் மூலம் தற்போது மின்னிலக்க பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாகச் செய்யப்பட்டன.

முப்பரிமாண முக அடையாளம்: கைரேகை அடையாள அம்சத்திற்குப் பதிலாக Face ID எனப்படும் முப்பரிமாண முக அடையாள அம்சம் அறிமுகம் காணும். இந்த பாதுகாப்பு அம்சம் இருட்டில் கூட வேலை செய்யுமாம்.

கம்பிவடமில்லா மின்னுட்டு முறை: கம்பிவடமில்லாத மின்னூட்டு முறை புதிய iPhoneஇல் அறிமுகமாகும். மின்னுட்டு வசதி கொண்ட தளத்தில் திறன்பேசியை வைத்தால் அது தானாக மின்னுட்டப்படும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்