Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரைப் பிரதிநிதித்து விளையாட வயது தடையல்ல

29ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கச் சில நாட்களே எஞ்சியுள்ளன.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரைப் பிரதிநிதித்து விளையாட வயது தடையல்ல

13 வயது ரேடியன்ஸ் கோவுடன் (வலது) 68 வயது சியா டீ சியா. (படம்: நிக்கோல் லிம்)

29ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கச் சில நாட்களே எஞ்சியுள்ளன.

இவ்வேளையில், போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து விளையாட வயது ஒரு தடையல்ல என்று கூறியுள்ளனர் 13 வயது ரேடியன்ஸ் கோவும் (Radiance Koh), 68 வயது சியா டீ சியாக்கும் (Chia Tee Chiak).

போட்டியில் கலந்துகொள்ளும் சிங்கப்பூர்க் குழுவில் ஆக இளையவர், உயர்நிலை ஒன்றில் பயிலும் மாணவி ரேடியன்ஸ் கோ; அவர் படகுப் போட்டியில் பங்கெடுக்கவிருக்கிறார்.

ஆக வயதானவர், பணியிலிருந்து ஓய்வுபெற்ற திரு. சியா டீ சியாக் அவர் உருட்டுப் பந்தில் தமது கைவரிசையைக் காட்டவிருக்கிறார்.

இளையர் ரேடியன்ஸ் முதன்முறையாகத் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கிறார். பல்வேறு தேர்வுச் சுற்றுகளின் அடிப்படையில் அந்த வாய்ப்பை அவர் பெற்றார்.

மூன்றாவது முறையாகத் தென்கிழக்காசியப் போட்டிகளில் களமிறங்கும் திரு. சியா டீ சியாக், உருட்டுப் பந்துக்கான முன்னாள் உலகத் தரவரிசைப் பட்டியலில் 11ஆவது இடத்தைப் பெற்றவர்.

கால்ஃப் விளையாட்டிலும் சிறந்து விளங்கும் அவர், உருட்டுப் பந்திற்கும் தமது கால்ஃப் பயிற்சி கைகொடுப்பதாகக் கூறினார்.
அனுபவ அடிப்படையில் இரு விளையாட்டாளர்களும் வேறுபட்டாலும், இந்த ஆண்டின் தென்கிழக்காசியப் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் வாய்ப்பு தாங்கள் எதிர்பாரா ஒன்று என்று கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்