Images
  • television
    கோப்புப் படம்: Channel NewsAsia 

சுமார் 40 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் இணைய உள்ளடக்கத்தைச் சட்டவிரோதமாக பயன்படுத்துகின்றனர் – ஆய்வு

இணைய உள்ளடக்கத்தை 39 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக Sycamore ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.  திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது நேரடி விளையாட்டு ஒளிவழிகளைச் சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்வதும் அதில் அடங்கும்.

ஆய்வில் கலந்துகொண்ட பாதிப் பேர் இணையத் திருட்டில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். அந்த ஆய்வை CASBAA எனும் ஆசியக் கம்பிவட, துணைக்கோள ஒளிபரப்புச் சங்கம் நடத்தியது.

அதில் 1,000 சிங்கப்பூரர்கள் கலந்துகொண்டனர்.  சட்டவிரோதப் பதிவிறக்கக் கருவிகளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மேலும் 300 பேரும் ஆய்வில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அவர்களின் போக்கை மேலும் புரிந்துகொள்வது அதன் நோக்கம்.     

உங்கள் கருத்து

Top