Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இன்னும் ஆரோக்கியமான வேலைச் சூழலை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம்

சிங்கப்பூர் ஊழியர்களில் சிலர், வருங்காலத்தில் இன்னும் ஆரோக்கியமான வேலைச் சூழலை எதிர்பார்க்கலாம். 

வாசிப்புநேரம் -
இன்னும் ஆரோக்கியமான வேலைச் சூழலை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம்

படம்: AFP/Roslan Rahman

சிங்கப்பூர் ஊழியர்களில் சிலர், வருங்காலத்தில் இன்னும் ஆரோக்கியமான வேலைச் சூழலை எதிர்பார்க்கலாம்.

கட்டட, கட்டுமான ஆணையம் இன்று வெளியிட்ட பசுமைக் கட்டட மூன்றாவது பெருந்திட்டம் அதற்கு வழிவகுக்கும். சிங்கப்பூர்ப் பசுமைக் கட்டட வாரத்தின் தொடக்க விழாவில், பெருந்திட்டத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டன.

புதிய பெருந்திட்டத்தின்கீழ், குடியிருப்பு அல்லாத மற்ற கட்டடங்கள், ஆணையத்தின் பசுமை முத்திரையைப் பெறவிரும்பினால், புதிய நிபந்தனைகள் சிலவற்றைப் பூர்த்தி செய்யவேண்டியிருக்கும்.

கட்டடத்தின் உட்புறக் காற்றுத் தரத்தை மேம்படுத்துவது அவற்றுள் ஒன்று.

மின்சாரத்தைக் குறைவாகச் செலவழிக்கும் விளக்குகளையும், நன்கு வடிவமைக்கப்பட்ட அலுவலக உபகரணங்களையும் பயன்படுத்த, கட்டட நிர்வாகங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

அதற்கான கூடுதல் பசுமை முத்திரைத் திட்டத்தை, அடுத்த ஆண்டு நடுப்பகுதிவாக்கில் அறிமுகம் செய்ய, அதிகாரிகள் திட்டமிடுகின்றனர்.

ஒவ்வொரு கட்டடத்தின் மின்சாரப் பயனீட்டையும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் இணையவாசல் ஒன்றை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்படுகிறது.

கட்டடங்கள் இன்னும் எவ்வாறு மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதில், கட்டுமானத் துறைக்கு உதவும் புதிய வழிமுறைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்