Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் 111,000 வேலைகளை உருவாக்கும்:மலேசியா

சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் திட்டம், இருநாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு $6.7 பில்லியன் பங்களிப்பைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் 111,000 வேலைகளை உருவாக்கும்:மலேசியா

படம்: Justin Ong

சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் திட்டம், இருநாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு $6.7 பில்லியன் பங்களிப்பைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2060 ஆம் ஆண்டுக்குள் 111,000 வேலை வாய்ப்புகளும் அதனால் உருவாகும்.

மலேசியாவின் நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையத் தலைமை நிர்வாக அதிகாரி முகமது அசாரூதின் மாட் ஷா அந்தத் தகவல்களை வெளியிட்டார்.

கோலாலம்பூரில் நடைபெறும் அதிவேக ரயில் திட்டம் தொடர்பிலான உச்சநிலை மாநாட்டில் அவர் சிறப்புரையாற்றினார்.

தனித்திருக்கும் வட்டாரங்களை இணைக்கவும், வளர்ச்சியை அதிகரிக்கவும், ரயில்பாதைக்கு அருகில் அமைந்திருக்கும் நகரங்களின் மேம்பாட்டுக்கும் அது வகைசெய்யும் என்றார் திரு.அசாரூதின்.

இருப்பினும், சில சிக்கலான விவகாரங்களின் தொடர்பில் செய்யவேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன.

நிதியளிப்பு, கட்டமைப்பின் விரிவாக்கம், திறன் அதிகரிப்பு, தொடர்பு, சமிக்ஞை முறை, பாதுகாப்பு ஆகியவை அவற்றில் அடங்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்