Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

NETS Pay கட்டணம் செலுத்தும்முறையை ஆண்டு இறுதிக்குள் வெளியீடு - NETS

NETS Pay கட்டணம் செலுத்தும்முறையை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்போவதாக NETS தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
NETS Pay கட்டணம் செலுத்தும்முறையை ஆண்டு இறுதிக்குள் வெளியீடு - NETS

படம்: Kevin Kwang

NETS Pay கட்டணம் செலுத்தும்முறையை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்போவதாக NETS தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் அத்தகைய கட்டண முறையை வெளிநாடுகளிலும் பயன்படுத்தலாம். Apple Pay, Android Pay போல NETS Pay கட்டணமுறை செயல்படும்.

Apple Pay, Android Pay செயலிகளில் வாடிக்கையாளர்கள் கடன் பற்று அட்டைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், NETS Pay கட்டண முறையில், NETS வங்கி அட்டைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

NETS Pay கட்டண முறையை வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளிலும் பயன்படுத்த EMVCo நிறுவனத்துடன் செயல்பட்டுவருவதாக NETS நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப்ரி கோ தெரிவித்தார்.

NETS Pay முறையில், வாடிக்கையாளர்கள் தங்கள் NETS அட்டை குறித்த விவரங்களை தொலைபேசியில் பதிந்து கொள்ள வேண்டும்.

அதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசியை உரிய சாதனத்தைக் காட்டிக் கட்டணத்தைச் செலுத்தலாம். NETS அண்மையில் QR குறியீட்டு முறையை அறிமுகம் செய்தது.

NETS Pay கட்டண வசதியைத் தங்கள் தொலைபேசியில் பயன்படுத்த முடியாதவர்களுக்கு QR குறியீடு கைகொடுக்கும்.

QR குறியீட்டை இணையத்தளங்களில் ஒருங்கிணைக்கவும் NETS திட்டமிட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்