Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தோனேசியாவின் சுமத்திராவுக்கு மேற்கே நிலநடுக்கம் - சிங்கப்பூரின் சில பகுதிகளில் நில அதிர்வுகள்

இந்தோனேசியாவின் சுமத்திராவுக்கு மேற்கே  6.5  ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவின் சுமத்திராவுக்கு மேற்கே நிலநடுக்கம் - சிங்கப்பூரின் சில பகுதிகளில் நில அதிர்வுகள்

(படம்: USGS)

இந்தோனேசியாவின் சுமத்திராவுக்கு மேற்கே 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. பெங்குலு நகருக்கு 81 கிலோமீட்டருக்கு மேற்கே நிலநடுக்கம் தாக்கியது. அதில் இதுவரை யாரும் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

மேற்கு சுமத்திராவின் பாடாங் நகர் வரை அதிர்வுகள் உணரப்பட்டன. ஆனால் சுனாமி ஏற்படும் அபாயமில்லை என இந்தோனேசிய வானிலை ஆய்வகம் கூறியது.

நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் தோ பாயோ, ஃபேரர் ரோடு பகுதிகளின் குடியிருப்பாளர்கள் சிலர் நில அதிர்வுகளை உணர்ந்ததாக சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்தனர்.

காலை 11 மணி அளவில் அதிர்வுகள் உணரப்பட்டன. பலர் சமூக ஊடகங்களில் அதிர்வுகளைப் பற்றிப் பதிவு செய்தனர்.

கடந்தாண்டு அச்சே மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்