Images
  • arrest
    (படம்: Reuters)

சிங்கப்பூரின் வடகிழக்கில் 19 பேர் கைது

சிங்கப்பூரின் வடகிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 14 ஆண்களும் 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், குடியிருப்பு வட்டாரங்களில் பாலியல் தொழில், உணவு நிலையத்தில் சூதாட்டக் கூடம் ஆகிய சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில் 20 மணி நேரச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் அந்தச் சோதனை நடத்தப்பட்டது.

சிங்கப்பூர்க் காவல்துறை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு-ஆகியவை இணைந்து வெளியிட்ட செய்தி அறிக்கையில் அந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்த விசாரணை தொடர்கிறது.
 

உங்கள் கருத்து

Top