Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிபராகவிருக்கும் திருவாட்டி ஹலிமாவுக்குத் திரு சாலே, திரு ஃபரிட் வாழ்த்து

47 ஆண்டுகளில் சிங்கப்பூரின் முதல் மலாய் அதிபராகத் திருவாட்டி ஹலிமா பதவியேற்கவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
அதிபராகவிருக்கும் திருவாட்டி ஹலிமாவுக்குத் திரு சாலே, திரு ஃபரிட் வாழ்த்து

(படம் : காயா சந்திரமோகன்)

அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த திரு சாலே மரைக்கானும் திரு ஃபரிட் கானும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவாட்டி ஹலிமா யாக்கோபிற்குத் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

47 ஆண்டுகளில் சிங்கப்பூரின் முதல் மலாய் அதிபராகத் திருவாட்டி ஹலிமா பதவியேற்கவிருக்கிறார்.

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராகவும் அவர் திகழ்வார்.

அனைவரையும் ஒன்றிணைக்கும் அதிபராகத் திருவாட்டி ஹலிமா விளங்குவார் என நம்புவதாகத் திரு சாலே மரைக்கான் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் சிங்கப்பூரர்களைத் தமது எண்ணங்களில் வைத்துக்கொண்டு திருவாட்டி ஹலிமா செயல்படுவார் எனத் திரு ஃபரிட் நம்பிக்கை தெரிவித்தார்.

போட்டியை எதிர்பார்த்த நிலையிலும் அது இல்லாமல் போனதைக் கனத்த மனத்துடன் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்