Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் எட்டாவது அதிபராகத் திருவாட்டி ஹலிமா யாக்கோப் அறிவிக்கப்பட்டுள்ளார்

சிங்கப்பூரின் எட்டாவது அதிபராகத் திருவாட்டி ஹலிமா யாக்கோப் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் எட்டாவது அதிபராகத் திருவாட்டி ஹலிமா யாக்கோப் அறிவிக்கப்பட்டுள்ளார்

(படம்: Channel NewsAsia)

சிங்கப்பூரின் எட்டாவது அதிபராகத் திருவாட்டி ஹலிமா யாக்கோப் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு ஆவணங்களை அவர் இன்று காலை சமர்ப்பித்தார்.
அந்த ஆவணங்கள் அனைத்தும் முறையாக இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரி திருவாட்டி ஹலிமாவை அதிபராக அறிவித்தார்.

வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் கூடியிருந்த தமது ஆதரவாளர்கள் முன்னிலையில் திருவாட்டி ஹலிமா உரையாற்றினார்.

தாம் அனைவருக்குமான அதிபர் என்றார் அவர்.

இது குறிப்பிட்ட சமூகத்தின் வேட்பாளர்களுக்கான தேர்தல் என்றாலும், தாம் ஒரே ஒரு சமூகத்துக்கான அதிபர் அல்ல என அவர் சொன்னார்.

இது சிங்கப்பூருக்கும், பல கலாசார, பல்லின சமூகத்துக்கும் பெருமைக்குரிய தருணம் என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.

எதிர்வரும் தலைமுறையினருக்கும் இது நன்மை தரும் என்றார் அவர்.

நமக்கு இடையே இருக்கும் வேற்றுமைகளில் கவனம் செலுத்துவதை விட, நமக்கு இடையே உள்ள ஒற்றுமைகளில் கவனம் செலுத்துமாறு திருவாட்டி ஹலிமா சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராகத் திருவாட்டி ஹலிமா இருப்பார்.
47 ஆண்டுகளில் சிங்கப்பூரின் முதல் மலாய் அதிபராகவும் அவர் திகழ்வார்.

இவ்வாண்டு அதிபர் தேர்தல் மலாய் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் தெரிவித்திருந்த மற்ற இருவரான திரு முகமது சாலே மரைக்கானும் திரு பரீட் கானும் தகுதிச் சான்றிதழைப் பெறத் தவறினர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்