Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்த அதிபராகவிருக்கும் திருவாட்டி ஹலிமா தொடர்ந்து யீஷூனில் வசிப்பாரா?

அதிபராகவிருக்கும் திருவாட்டி ஹலிமா யாக்கோப் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் யீஷூன் அவென்யூ 4இல் வசித்துவருகிறார்.

வாசிப்புநேரம் -
அடுத்த அதிபராகவிருக்கும் திருவாட்டி ஹலிமா தொடர்ந்து யீஷூனில் வசிப்பாரா?

(படம் : காயா சந்திரமோகன்)

சிங்கப்பூரின் அடுத்த அதிபராகவிருக்கும் திருவாட்டி ஹலிமா யாக்கோப் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் யீஷூன் அவென்யூ 4இல் வசித்துவருகிறார்.

அதிபரான பிறகும் இப்போது வசிக்கும் வீட்டிலியே தொடர்ந்து இருக்க வேண்டும் எனத் தமது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

அவர் அதிபராகவிருக்கிறார் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் இன்று திருவாட்டி ஹலிமா வசிக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன.

காவல்துறை அதிகாரிகளும் அங்கு பணியில் அமர்த்தப்பட்டனர்.

(படம் : காயா சந்திரமோகன்)

கார் நிறுத்தும் இடத்தில் காவல்துறை வாகனங்களுக்காக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

(படம் : காயா சந்திரமோகன்)

நாளை திருவாட்டி ஹலிமா சிங்கப்பூரின் 8ஆவது அதிபராக இஸ்தானாவில் பதவி ஏற்பார். அதற்குப் பிறகும் தமது கணவர் முஹம்மது அடுல்லா அல்ஹப்ஷீயுடன் தொடர்ந்து அந்த வீட்டிலேயே இருக்கவுள்ளதாக விருப்பம் தெரிவித்தார் திருவாட்டி ஹலிமா. 

(படம் : காயா சந்திரமோகன்)

அந்த மாற்றத்தை அண்டை வீட்டார்கள் எப்படி பார்ப்பர்?

திருவாட்டி ஹலிமா மகிழ்ச்சியாக இருப்பதே தங்களுக்கு முக்கியம் எனச் சிலர் கூறினர்.

குடியிருப்பாளர்களுடன் திருவாட்டி ஹலிமா எப்போதும் பேசுவார் என்று தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர் வேறு சிலர். 

பாதுகாப்பு விவகாரங்களைப் பாதுகாப்புப் பிரிவிடமே விட்டுவிடுவதாகத் திருவாட்டி ஹலிமா கூறினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்