Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய iPhoneகளுக்குப் பதிவுசெய்ய சிங்டெல் இணையத்தளம் அறிமுகம்

சிங்டெல் நிறுவனம், iPhone X, iPhone 8, iPhone 8 பிளஸ் திறன்பேசிகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், தனது இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
புதிய iPhoneகளுக்குப் பதிவுசெய்ய சிங்டெல் இணையத்தளம் அறிமுகம்

(படம் : AFP)

சிங்டெல் நிறுவனம், iPhone X, iPhone 8, iPhone 8 பிளஸ் திறன்பேசிகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், தனது இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Apple நிறுவனத்தின் iPhone X திறன்பேசி, 14.7 செண்டிமீட்டர் உயர்தரத் திரையைக் கொண்டிருக்கும். முக அடையாளத்தைக் கொண்டு கைபேசியைப் பயன்படுத்த முடியும்.

64 கிகாபைட், 256 கிகாபைட் ஆகிய இரண்டு மாதிரிகளில் iPhone X வெளிவரவுள்ளது.

நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து iPhone X சிங்கப்பூரில் விற்கப்படும்.

ஒப்பந்தம் இல்லாத கைபேசிகளின் விலை S$1,648இலிருந்து தொடங்கும். அதற்கான முன்பதிவு அடுத்த மாதம் 27ஆம் தேதி, பிற்பகல் 3.01 மணியிலிருந்து தொடங்கும்.

iPhone 8, iPhone 8 Plus ஆகிய கைபேசிகள் இம்மாதம் 22ஆம் தேதி விற்பனைக்கு வரும். iPhone 8இன் விலை S$1,148இலிருந்து ஆரம்பிக்கும். iPhone 8 Plusஇன் விலை S$1,308இலிருந்து தொடங்கும். அதற்கான முன்பதிவு இம்மாதம் 15ஆம் தேதி, பிற்பகல் 3.01 மணியிலிருந்து ஆரம்பிக்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்