Images
  • 130917 lee congatz halimah
    (படம் : பிரதமர் லீ சியென் லூங் ஃபேஸ்புக்)

திருவாட்டி ஹலிமாவுக்குப் பிரதமர் லீ வாழ்த்து

திருவாட்டி ஹலிமா யாக்கோப் அதிபராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் லீ சியென் லூங் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் எட்டாவது அதிபராகும் அவரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்ததாகப் பிரதமர் லீ கூறினார்.

தொழிற்சங்கவாதி, சமூகத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற நாயகர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர் திருவாட்டி ஹலிமா.

பலதரப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு நீண்டகாலம் சேவையாற்றிய அனுபவத்தோடு, அவர் அதிபர் பொறுப்பை ஆற்றவுள்ளதாகத் திரு. லீ குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் பல இன, பல சமய சமூகத்திற்கு அதிபர் ஓர் அடையாளச் சின்னம் என்றும் அவர் நமது அரசியலமைப்பின் சிகரமாகத் திகழ்வார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வந்த திரு. சாலே மரைக்கானுக்கும் திரு. ஃபரீட் கானுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அதிபர் தேர்தல் குழுவின் முடிவுகளை அவர்கள் ஏற்றுக்கொண்டதற்கும் திரு. லீ நன்றி கூறினார்.

நாளை பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருக்கும் திருவாட்டி ஹலிமாவுக்குத் தம்மைப் போல் பொதுமக்களும் ஆதரவு வழங்குவர் என்று, தமது Facebook பக்கத்தில் பிரதமர் லீ நம்பிக்கை தெரிவித்தார்.


 

உங்கள் கருத்து

Top