Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மனநோயாளிகளுக்கு 20 ஆண்டு வரை ஆயுள் குறையக்கூடும்

மனநோயைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கும் நோயாளிகளில் சிலர், உடல்நலப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை பெற மறுத்து வருகின்றனர். 

வாசிப்புநேரம் -
மனநோயாளிகளுக்கு 20 ஆண்டு வரை ஆயுள் குறையக்கூடும்

(படம் :The New York Times)

சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் 82 வயது.

ஆனால் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆண்டு முன்னதாகவே மரணமடைகின்றனர். 

2015க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் மாண்ட 891 மனநோயாளிகளின் சராசரி வயது 64.3. 

மற்ற வளர்ந்த உலக நாடுகளுக்கும் இதே நிலை.

இரண்டாவது வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளை விட மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆண்டு ஆயுட்காலம் குறைவு. 

அமெரிக்காவில், கடும் மனநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 1.1 மில்லியன் பேர் 28.5 ஆண்டு வரை ஆயுட்காலத்தை இழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இடையே தற்கொலைச் சம்பவங்கள் பரவலாகக் காணப்பட்டாலும், அவர்கள் நோய்வாய்ப்படும் சாத்தியமும் அதிகம். 

மனநோயால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டதட்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள், நாட்பட்ட நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். 

உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு, நீரிழிவு, இருதய நோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களால் கடும் மனநோயால்

பாதிக்கப்பட்டவர்களில் 80 விழுக்காட்டினர் மரணமடைகின்றனர். 

பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவுமுறை, போதுமான உடற்பயிற்சி இல்லாதிருத்தல், புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் இதுபோன்ற நாட்பட்ட நோய்கள் வரக் காரணமாகின்றன. 

மனநோயைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கும் நோயாளிகளில் சிலர், உடல்நலப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை பெற மறுத்து வருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்