Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேட்புமனுத் தாக்கல் தினம்: இன்று என்ன நடக்கும்

அடுத்த அதிபராவார் என்று எதிர்பார்க்கப்படும் திருவாட்டி ஹலிமா யாக்கோப் தமது வேட்புமனுவை வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் இன்னும் சிறிது நேரத்தில் சமர்ப்பிப்பார். 

வாசிப்புநேரம் -
வேட்புமனுத் தாக்கல் தினம்: இன்று என்ன நடக்கும்

(படம்: Facebook/Halimah Yacob)

இன்று வேட்புமனுத் தாக்கல் தினம். அடுத்த அதிபராவார் என்று எதிர்பார்க்கப்படும் திருவாட்டி ஹலிமா யாக்கோப் தமது வேட்புமனுவை வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் இன்னும் சிறிது நேரத்தில் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனுத் தாக்கல் நடைமுறைகள் பற்றிய எளிதான விளக்கம்:

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்குத் தேவையான ஆவணங்கள்

- வேட்புமனுப் படிவம்
- அதிபர் தேர்தல் குழுவால் வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ்
- மலாய் இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ்
- அரசியல் நன்கொடைச் சான்றிதழ்
- தேர்தல் வைப்புத்தொகை ($43,500) அல்லது அதற்கான ரசீது

வேட்புமனுத் தாக்கல் நிலையத்திற்குத் திருவாட்டி ஹலிமாவுடன் 6 பேர் செல்ல வேண்டும்:

- முன்மொழிபவர்
- வழிமொழிபவர்
- இணக்கம் தெரிவிப்பவர்கள் நால்வர்

நண்பகல் 12 மணிக்குள் வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரை தேர்தல் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.

தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் நாளை பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்