Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆசியான் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுகள்: சிங்கப்பூர்க் குழு கோலாலம்பூருக்குப் புறப்பட்டது

கோலாலம்பூருக்குப் புறப்படுவதற்கு முன்னர், சிங்கப்பூர்க் குழுவினர் ரசிகர்களைச் சந்தித்து கலந்துரையாடினர். விளையாட்டாளர்களின் அன்புக்குரியவர்களும் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.  

வாசிப்புநேரம் -
ஆசியான் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுகள்: சிங்கப்பூர்க் குழு கோலாலம்பூருக்குப் புறப்பட்டது

(படம்: Junn Loh)

கோலாலம்பூரில் நடக்கவிருக்கும் 9ஆவது ஆசியான் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுகளில் பங்குபெற சிங்கப்பூரின் குழு புறப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு 90 விளையாட்டாளர்கள் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கவுள்ளனர்.

இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டில் தாய்லந்தில் உடற்குறையுள்ளவர்களுக்கான ஆசியான் விளையாட்டுகளில் 57 சிங்கப்பூர்ப் போட்டியாளர்கள் பங்கெடுத்தனர்.

சிங்கப்பூரின் சிறந்த விளையாட்டாளர்களை வெளிப்படையாய்த் தேர்வுசெய்ததாக சிங்கப்பூர்த் தேசிய உடற்குறையுள்ளோருக்கான மன்றத் தலைவர் கேவின் ஜெராட் வோங் சொன்னார்.

கோலாலம்பூரில் நடக்கும் விளையாட்டுகளில் சிங்கப்பூர்க் குழு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே முக்கிய எண்ணம் என்றும் அவர் கூறினார்.

கோலாலம்பூருக்குப் புறப்படுவதற்கு முன்னர், சிங்கப்பூர்க் குழுவினர் ரசிகர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.
விளையாட்டாளர்களின் அன்புக்குரியவர்களும் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.

தன்னம்பிக்கையுடன் இருப்பதாக விளையாட்டாளர்கள் கூறினர்.

16 போட்டிகளில் சிங்கப்பூர்க் குழு 11இல் பங்கேற்கவுள்ளது.
வரும் 17ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதிவரை உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுகள் இடம்பெறும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்