Images
  • ரொஹிஞ்சா
    (படம்: AFP/STR)

ரொஹிஞ்சா விவகாரத்தில் உலக நாடுகள் கருத்து வேறுபாடு - சீனா ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு

மியன்மாரில் மோசமடைந்துவரும் அகதிகள் பிரச்சினை தொடர்பான ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தின் சந்திப்புக்கு முன்னதாக, உறுப்பு நாடுகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

ரக்கைன் மாநிலத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.

இருப்பினும், அமெரிக்காவும், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமை அமைப்பும் அந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ரக்கைன் மாநிலத்தில் ரொஹிஞ்சா இனத்தினரை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கை அதுவென்று அவை கருதுகின்றன.

அண்டை நாடான பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்றுள்ள ரொஹிஞ்சா மக்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 400 ,000க்கு அதிகரித்துள்ளதாகக் நம்பப்படுகிறது.

ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம் இன்று கூடும்போது, மற்ற நாடுகள் மியன்மாருக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை எதிர்க்கும் முயற்சியாக சீனாவின் தலையீடு தெரிவதாகக் கூறப்படுகிறது.

மியன்மாரின் முன்னாள் ராணுவ அரசாங்கத்தின் ஒரு சில நட்பு நாடுகளில் சீனாவும் ஒன்று. திருவாட்டி ஆங் சான் சூச்சியின் அரசாங்கத்துடனும் சீனா நட்பு நாடாகத் திகழ்கிறது.

தென்கிழக்காசிய வட்டாரத்தில் பெரிய அளவிலான வர்த்தக, எரிசக்தி, உள்ளமைப்பு போன்றவற்றுக்கான வசதிகளை உருவாக்க சீனா கொண்டுள்ள உத்தியின் ஒரு பகுதியாக அது கருதப்படுகிறது.

இந்நிலையில், ரக்கைன் மாநிலத்தில் ரொஹிஞ்சா இனத்தினரை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை, மியன்மாருக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத் தூதர் டின் லின் கடுமையாக எதிர்த்துள்ளார். 

உங்கள் கருத்து

Top