Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஐ.நா.வின் சுகாதார இலக்குகளை எட்டிய நாடுகளில் சிங்கப்பூர் முதல் நிலை

ஐக்கிய நாட்டு நிறுவனத்தால் முன்வைக்கப்பட்ட சுகாதார இலக்குகளை எட்டிய 188 நாடுகளில் சிங்கப்பூர் முதல் நிலையைப் பிடித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஐ.நா.வின் சுகாதார இலக்குகளை எட்டிய நாடுகளில் சிங்கப்பூர் முதல் நிலை

(படம்: Channel NewsAsia)

ஐக்கிய நாட்டு நிறுவனத்தால் முன்வைக்கப்பட்ட சுகாதார இலக்குகளை எட்டிய 188 நாடுகளில் சிங்கப்பூர் முதல் நிலையைப் பிடித்துள்ளது.

நோய்கள், காயங்கள், அபாய அம்சங்கள் ஆகியவற்றின் உலகளாவிய தாக்கம் குறித்து நடத்தப்பட்ட ஆய்விலிருந்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் நீடித்து நிலைக்கத்தக்க சுகாதார வளர்ச்சி இலக்கை நாடுகள் எப்படிக் கடைப்பிடிக்கின்றன என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நீடித்து நிலைக்கத்தக்க சுகாதார வளர்ச்சிக்கான முக்கியக் குறியீடுகளை ஆய்வாளர்கள் 26 ஆண்டு காலத்திற்குக் கணக்கிட்டு, அடுத்த 13 ஆண்டுகளுக்கான முன்னறிவிப்பையும் வரைந்துள்ளனர்.

இந்தக் குறியீடுகளை அடையும் நிலையில் இருக்கும் நாடுகளில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஐஸ்லந்து, ஸ்வீடன் ஆகிய வளர்ச்சியடைந்த நாடுகள் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளன.

தடுப்பூசித் திட்டங்கள், மரணங்களை முறையாகப் பதிவுசெய்யும் முறை, குழந்தை மரணங்களைக் குறைத்தல் ஆகிய குறியீடுகளில் முழு மதிப்பெண்களைப் பெற்றது சிங்கப்பூர். முழு மதிப்பெண்களைப் பெற்ற நான்கு நாடுகளில் அதுவும் ஒன்று.

குற்ற எண்ணிக்கை, சாலை விபத்துக்கள், முழுமையான சுகாதாரத் திட்டங்கள் ஆகிய குறியீடுகளிலும் சிங்கப்பூர் சிறந்து விளங்கியது.

எனினும் காற்றுத் தூய்மைகேடு, காசநோய், HIV கட்டுப்பாடு ஆகிய அம்சங்களில் சிங்கப்பூர் பின்தங்கியுள்ளது என்பது ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வின் இறுதி நிலைகளில் ஆஃப்கானிஸ்தான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சோமாலியா ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்