Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிபர் பணியைத் தொடங்கிய திருவாட்டி ஹலிமா யாக்கோப்

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திருவாட்டி ஹலிமா யாக்கோப்,  தமது முதல் நாள் பணியை இஸ்தானாவில் தொடங்கியிருக்கிறார். இன்று மாலை அவரது பதவிப்பிரமாணச் சடங்கு நடைபெறவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
அதிபர் பணியைத் தொடங்கிய திருவாட்டி ஹலிமா யாக்கோப்

இஸ்தானாவில் திருவாட்டி ஹலிமா ( நடுவில்)

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திருவாட்டி ஹலிமா யாக்கோப், தமது முதல் நாள் பணியை இஸ்தானாவில் தொடங்கியிருக்கிறார். இன்று மாலை அவரது பதவிப்பிரமாணச் சடங்கு நடைபெறவிருக்கிறது.

முன்னைய நாடாளுமன்ற நாயகரான அவர் யீஷூனிலுள்ள தமது வீட்டிலிருந்து அரசாங்கக் காரில் அதிபர் மாளிகைக்குச் சென்றார்.

காலை சுமார் 9.30 மணிக்கு அவர் அதிபர் மாளிகையை அடைந்தார். அதிபர் அலுவலக ஊழியர்கள் அவரை வரவேற்றனர்.

வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று அவர் சிங்கப்பூரின் அடுத்த அதிபராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
63 வயது திருவாட்டி ஹலிமா 47 ஆண்டுகளில் மலாய் இனத்தைச் சேர்ந்த முதல் அதிபராகவிருக்கிறார்.

இஸ்தானாவுக்குள் சிங்கப்பூரர்கள் நுழைவதை மேலும் எளிதாக்குவது குறித்து யோசனை செய்துவருவதாகத் திருவாட்டி ஹலிமா செய்தியாளர்களிடம் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்