Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிளமெண்டி புளோக்கில் வெடித்த நீர்க்குழாய்

'கிளமெண்டி மால்' கடைத்தொகுதிக்கு மேலே உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் நீர்க்குழாய் ஒன்று வெடித்ததைத் தொடர்ந்து, அந்தக் கட்டடத்தின் நான்கு மின்தூக்கிகள் செயலிழந்தன. கிளமெண்டி அவென்யூ 3இலுள்ள புளோக் 441Aஇல் அந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் நடந்தது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: 'கிளமெண்டி மால்' கடைத்தொகுதிக்கு மேலே உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் நீர்க்குழாய் ஒன்று வெடித்ததைத் தொடர்ந்து, அந்தக் கட்டடத்தின் நான்கு மின்தூக்கிகள் செயலிழந்தன.

கிளமெண்டி அவென்யூ 3இலுள்ள புளோக் 441Aஇல் அந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் நடந்தது.
சம்பவம் குறித்த தகவல் பிற்பகல் 2 மணிக்குக் கிடைத்ததாக ஜூரோங் கிளமெண்டி நகர மன்றம் தெரிவித்தது. வெடித்த நீர்குழாய் ஒரு மணி நேரத்திற்குள் சரிசெய்யப்பட்டதாக ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வூ மேங் கூறினார்.

மின்தூக்கிகளில், 'C' மின்தூக்கி மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆயினும், A, D ஆகிய மின்தூக்கிகள் தற்போதைக்குச் செயல்பாட்டில் இல்லை. சம்பவத்தின்போது யாரும் மின்தூக்கிக்குள் சிக்கிக்கொள்ளவில்லை என்று சேனல்நியூஸ்ஏஷியா அறிகிறது.

நடந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்