Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உலக சுகாதார, வாழ்க்கைத் தரப் பட்டியல் - முதலிடத்தில் சிங்கப்பூர்

உலக சுகாதார, வாழ்க்கைத் தரப் பட்டியலில், சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.The Lancet எனும் அனைத்துலக மருத்துவச் சஞ்சிகை வெளியிட்ட அறிக்கை அதனைத் தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
உலக சுகாதார, வாழ்க்கைத் தரப் பட்டியல் - முதலிடத்தில் சிங்கப்பூர்

படம்: Channel NewsAsia

உலக சுகாதார, வாழ்க்கைத் தரப் பட்டியலில், சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.The Lancet எனும் அனைத்துலக மருத்துவச் சஞ்சிகை வெளியிட்ட அறிக்கை அதனைத் தெரிவித்தது.

188 நாடுகள் பட்டியலிடப்பட்ட கருத்தாய்வின் முடிவில் அந்த விவரம் தெரியவந்தது.
உலக நாடுகள் சென்ற ஆண்டு எதிர்கொண்ட நோய்கள், காயங்கள், அவற்றுக்குக் காரணமான அம்சங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.

ஐக்கிய நாட்டு நிறுவனம் 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டிய நீடித்த மேம்பாட்டு இலக்குகளை வரையறுத்துள்ளது. அவற்றுள் 37, சுகாதாரம் சார்ந்த இலக்குகள்; அவற்றை நிறைவேற்றுவதில், நாடுகளின் தற்போதைய நிலை மதிப்பிடப்பட்டது.

மரண விகிதம், கழிவு அகற்றல், தூய்மை போன்ற அம்சங்கள் ஆய்வில் கருத்தில்கொள்ளப்பட்டன. அவற்றில் சிங்கப்பூர் கிட்டத்தட்ட முழு மதிப்பெண்களைப் பெற்றது.

ஐஸ்லந்து, சுவீடன் இரண்டும் சிங்கப்பூருக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ளன. எனினும், குழந்தைகளிடம் காணப்படும் உடற்பருமன் பிரச்சினை, தற்கொலை விகிதம், சிறுவர் பாலியல் வன்முறை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் சிங்கப்பூர் பின்தங்கியுள்ளது.

சோமாலியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஆய்வில் ஆகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்