Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊழியர்களுக்கு அதிக ஆதரவு: தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் சட்ட அமைப்பில் மாற்றம்

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் சட்ட அமைப்பைப் புதுப்பித்து மாற்ற, அதன் இணைப்புத் தொழிற்சங்கங்கள் வாக்களித்துள்ளன.

வாசிப்புநேரம் -
ஊழியர்களுக்கு அதிக ஆதரவு: தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் சட்ட அமைப்பில் மாற்றம்

சிங்கப்பூர் நகரக்காட்சி. (படம்: Reuters)

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் சட்ட அமைப்பைப் புதுப்பித்து மாற்ற, அதன் இணைப்புத் தொழிற்சங்கங்கள் வாக்களித்துள்ளன. சிங்கப்பூரிலுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் சேவை வழங்கும் நோக்கத்துடன் தொழிற்சங்கக் காங்கிரசின் சட்ட அமைப்பை விரிவுபடுத்துவது மாற்றங்களின் நோக்கம்.

கீழ்நிலை ஊழியர்களை மட்டுமே தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் பிரதிநிதிக்கிறது என்று தற்போதைய சட்ட அமைப்பிலிருந்து சிலர் அர்த்தம் கொள்வதாகக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் சான் சுங் சிங் தெரிவித்தார்.

எந்த நிலையில் உள்ள ஊழியருக்காகவும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் பணியாற்றும் எனத் திரு சான் உறுதியளித்தார்.

தொழில்நுட்பத்தால் ஏற்படும் பெரும் மாற்றங்களால் புதுப்புது வர்த்தகங்களும் புதிய திறன்கள் தேவைப்படும் வேலைகளும் உருவாகியுள்ளன. இந்தச் சூழ்நிலைக்கிடையே தொழிற்சங்கக் காங்கிரசிலும் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தொழிலாளர் இயக்கத்தின் வருங்காலப் பாதையை வரையறுக்கும் 9 பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சிறிய, நடுத்தர நிறுவனங்களின் ஊழியர்கள், நிர்வாகிகள், நிபுணர்கள், பகுதிநேர ஊழியர்கள், சொந்தத் தொழில் நடத்துபவர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் போன்றோருக்கு ஆதரவு தரும் திட்டங்கள் அந்தப் பத்திரங்களில் உள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்