Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூ கூன் ரயில் மோதல் - 24 ஆண்டுகளில் நேர்ந்த 2ஆவது பெரிய ரயில் மோதல் சம்பவம்

இன்று காலை (நவம்பர் 15) நடந்த ஜூ கூன் ரயில் மோதல் சம்பவம் சிங்கப்பூர்ப் போக்குவரத்து வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது ரயில் மோதல் சம்பவம் ஆகும். 

வாசிப்புநேரம் -
ஜூ கூன் ரயில் மோதல் - 24 ஆண்டுகளில் நேர்ந்த 2ஆவது பெரிய ரயில் மோதல் சம்பவம்

(படம்: TODAY)

இன்று காலை (நவம்பர் 15) நடந்த ஜூ கூன் ரயில் மோதல் சம்பவம் சிங்கப்பூர்ப் போக்குவரத்து வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது ரயில் மோதல் சம்பவம் ஆகும்.

முதல் சம்பவம் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நிகழ்ந்தது. கிளமெண்டி ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் மோதின. காலை 7.50 மணி அளவில் அச்சம்பவம் நடந்தது. அதில் 156 பயணிகள் காயமடைந்தனர்.

அந்த நேரத்தில், ஜூரோங் ஈஸ்ட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், அந்த நிலையத்தில் வழக்கத்தை விட 2 நிமிடங்கள் கூடுதலாக நின்றது. தொழில்நுட்பக் கோளாற்றால் அந்த ரயில் அங்கு நின்றது. நின்று கொண்டிருக்கும் வேளையில், மற்றொரு ரயில் அதன் மீது மோதியது. மோதல் காரணமாகப் பயணிகள் தூக்கியெறியப்பட்டனர். 8 பேருக்குப் பலந்த காயங்கள் ஏற்பட்டன.

இன்று (நவம்பர் 15) காலை ஜூ கூன் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவத்தில் 25 பேர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்