Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய கட்டணப் பிரிவுகளை அறிமுகப்படுத்தும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர் நிறுவனங்கள்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர் விமான நிறுவனங்கள் புதிய கட்டணப் பிரிவுகளை அறிமுகப்படுத்தவுள்ளன. 

வாசிப்புநேரம் -
புதிய கட்டணப் பிரிவுகளை அறிமுகப்படுத்தும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர் நிறுவனங்கள்

(படம்: AFP / TOH TING WEI)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர் விமான நிறுவனங்கள் புதிய கட்டணப் பிரிவுகளை அறிமுகப்படுத்தவுள்ளன. முன்கூட்டியே இருக்கையைத் தேர்ந்தெடுப்பது, அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் கிரிஸ்ஃபிலையர் புள்ளிகள், பயணிகளுக்கு அனுமதிக்கப்படும் பயணப் பெட்டி எடை ஆகிய அம்சங்களை ஒட்டி புதிய கட்டணப் பிரிவுகள் அமையும்.

அடுத்த மாதம் முதல் அனைத்துலக அளவில் அந்தக் கட்டணப் பிரிவுகள் அறிமுகமாகும்.

லைட் (Lite), ஸ்டாண்டர்ட் (Standard) , ஃபிலெக்ஸி (Flexi) என்ற மூன்று கட்டணப் பிரிவுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் விமானச் சீட்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

லைட், ஸ்டாண்டர்ட் பிரிவுப் பயணிகளுக்கு 30 கிலோகிராம் பயணப் பெட்டி எடை அனுமதிக்கப்படும். ஃப்லெக்ஸி பிரிவுப் பயணிகளுக்கு 35 கிலோகிராம் எடை அனுமதிக்கப்படும்.

லைட் கட்டணப் பிரிவைத் தேர்ந்தெடுப்போர் விமான இருக்கையைத் தெரிவுசெய்ய கட்டணம் செலுத்துவர்.

ஃப்லெக்ஸி கட்டணப் பிரிவுப் பயணிகள் பெறும் கிரிஸ்ஃபிலையர் புள்ளிகளில் பாதி அளவு லைட் பிரிவுப் பயணிகளுக்குக் கிடைக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்