Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நெதர்லந்திலிருந்து இறக்குமதியாகும் சில கோழி, வாத்து உணவு வகைகளுக்குத் தடை

நெதர்லந்தின் ஒரு வட்டாரத்தில் இருந்து கோழிகளையும் வாத்துகளையும் அவை சார்ந்த மற்ற உணவு வகைகளையும் இறக்குமதி செய்வதை சிங்கப்பூர் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தற்காலிகமாய் தடை செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
நெதர்லந்திலிருந்து இறக்குமதியாகும் சில கோழி, வாத்து உணவு வகைகளுக்குத் தடை

(படம்: AFP)

நெதர்லந்தின் ஒரு வட்டாரத்தில் இருந்து கோழிகளையும் வாத்துகளையும் அவை சார்ந்த மற்ற உணவு வகைகளையும் இறக்குமதி செய்வதை சிங்கப்பூர் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தற்காலிகமாய் தடை செய்துள்ளது.

அங்குள்ள வாத்துப் பண்ணை ஒன்றில் நோயைப் பரப்பக்கூடிய பறவைக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக ஆணையம் கூறியது.

வெப்பத்தால் பதப்படுத்தப்பட்ட வாத்து சார்ந்த உணவுவகைகள் தடைசெய்யப்படமாட்டா என்று மீடியாகார்ப் கேட்ட கேள்விக்கு ஆணையம் பதிலளித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் நெதர்லந்தில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு சுமார் 16 ஆயிரம் வாத்துகள் சாகடிக்கப்பட்டன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்