Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

DBS, POSB தானியக்க வங்கிச் சேவைகளில் தற்காலிக தடங்கல்கள்

DBS, POSB வாடிக்கையாளர்கள் சிலரால் நேற்று (14 டிசம்பர்) சிறிது காலம்  தானியக்க வங்கிச் சேவைகளைப் பயன்படுத்த முடியவில்லை.

வாசிப்புநேரம் -
DBS, POSB தானியக்க வங்கிச் சேவைகளில் தற்காலிக தடங்கல்கள்

(படம்: : AFP / Roslan Rahman)

DBS, POSB வாடிக்கையாளர்கள் சிலரால் நேற்று (14 டிசம்பர்) சிறிது காலம் தானியக்க வங்கிச் சேவைகளைப் பயன்படுத்த முடியவில்லை.

வங்கி தொடர்பு கட்டமைப்பில் தற்காலிகத் தடங்கல்கள் ஏற்பட்டதால் சேவைத் தடை ஏற்பட்டது என்று வங்கி தெரிவித்துள்ளது.

பிற்பகல் மணி நாலரை முதல் வாடிக்கையாளர்கள் பணமாற்ற சேவைகளையும் காசுகளை வைப்பிடு செய்யும் சேவைகளையும் பயன்படுத்த முடியவில்லை என்று புகார் செய்தனர். சிலர் தீவு முழுவதும் வங்கி சேவைகளில் தடை ஏற்பட்டதாகக் கூறினர்.

தானியக்க வங்கிச் சேவைகள் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளதாய் DBS வங்கி தெரிவித்தது. சேவை தடைகள் தீவு முழுவதும் ஏற்படவில்லை என்பதையும் உறுதிசெய்தது.

மாலை சுமார் 6 மணிக்கு DBS, POSB வங்கிகள் தங்கள் Twitter பக்கங்களில், சேவை தடைக்கு மன்னிப்புக் கேட்டுகொண்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்