Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மின் ஸ்கூட்டர் கடையில் மின்கலன்கள் வெடித்ததில் இருவருக்குக் காயம்

மின் ஸ்கூட்டர் கடை ஒன்றில் மின்கலன்கள் வெடித்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆடவரும் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும் காயமடைந்தனர்.

வாசிப்புநேரம் -
மின் ஸ்கூட்டர் கடையில் மின்கலன்கள் வெடித்ததில் இருவருக்குக் காயம்

(படம்: Channel NewsAsia)

மின் ஸ்கூட்டர் கடை ஒன்றில் மின்கலன்கள் வெடித்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆடவரும் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும் காயமடைந்தனர்.

லேசான தீப்புண் காயங்களுடன் அவர்கள் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அந்தச் சம்பவம் இன்று (டிசம்பர் 15) காலை FalconPEV மின்-ஸ்கூட்டர் கடையில் நடந்தது. அந்தக் கடை, 2-அலெக்ஸெண்டர் ரோட்டில் உள்ள டெல்ட்டா ஹவுஸில் அமைந்துள்ளது.

காயமடைந்த இருவரும் அக்கடையின் ஊழியர்கள் என சேனல் நியூஸ்ஏஷியா அறிகிறது.

அந்தக் கடை, கட்டடத்தின் ஆறாவது தளத்தில் அமைந்துள்ளது.

தீச்சம்பவம் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குக் காலை 11 மணி அளவில் தகவல் கிடைத்தது.

மின்-ஸ்கூட்டர் ஒன்றில் தீ மூண்டதாகவும் தீயணைப்பான் மூலம் அது அணைக்கப்பட்டதாகவும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்