Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பின் மீதேறிய கார்

பிரேடல் ரோட்டில் கார் ஒன்று, சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பின் மீது ஏறி,  சாலை அறிவிப்புப் பலகை ஒன்றைச் சாய்த்தது. 

வாசிப்புநேரம் -
சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பின் மீதேறிய கார்

(படம்: Channel NewsAsia)

பிரேடல் ரோட்டில் கார் ஒன்று, சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பின் மீது ஏறி, சாலை அறிவிப்புப் பலகை ஒன்றைச் சாய்த்தது.

அந்தச் சம்பவம் இன்று (டிசம்பர் 15) காலை பார்ட்லி ரோட்டை நோக்கிச் செல்லும் பிரேடல் ரோடு மேம்பாலச் சாலையில் நடந்தது.

சம்பவம் குறித்துக் காவல்துறையினருக்குக் காலை 11.30 மணி அளவில் தகவல் கிடைத்தது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மத்திய விரைவுச் சாலைக்கு இட்டுச் செல்லும் தடத்திற்குச் செல்ல ஓட்டுநர் முயன்றதாக சேனல் நியூஸ்ஏஷியா அறிகிறது. ஆனால் ஓட்டுநர் தவறான திசையில் காரைத் திருப்பியுள்ளார். தடம் மாற முயன்ற போது சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பின் மீது அவர் மோதினார்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்